headline photo

மதுவின் பரிசு விரைவில் நம் பிள்ளைகளை தேடி!!!

Tuesday, September 17, 2013

உயிர் குடிக்கும் பாலியல்! 
மதுவின் பரிசு விரைவில் நம் பிள்ளைகளை தேடி!!!

3 வயது மகளுக்கு மது கொடுத்து, கண்ணை கட்டி கற்பழித்த குடிகாரத் தந்தை.
செங்துங்கநல்லூரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்
மீண்டும் ஒரு பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம்.
டெல்லியில் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம்.
3 ,1/2வயது பள்ளி குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி உரிமையாளரின் கணவர் .
14 வயது மாணவியை வகுப்பறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்.
மூன்று வயது குழந்தையை பலாத்காரம் செய்த தந்தை தலை

எழுத்தில், திரையில், பொதுவில் ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள்?

எழுத்தில், திரையில், பொதுவில்... ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள் என்ற சித்திரம் பின்னப்பட்டிருக்கிறது. இது முழு பொய் இல்லை, முழு உண்மையும் இல்லை. முப்பதைக் கடந்த வயதில்... தங்கையின் திருமணம், அக்காவின் பேறுகாலம் என நில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்கள் அநேகம் பேர். இ.எம்.ஐ.யில் பணம் செலுத்தி தங்கச்சி மாப்பிள்ளைக்கு ஸ்பெலண்டர் பிளஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு 27B-க்கு காத்துக்கிடக்கும் இளைஞர்கள் எத்தனையே பேர்!

அரடஜன் ஆட்டுக் குட்டியையும் லவுக்க போடாத பொம்பளைய காட்டுனா நீயெல்லாம் பாரதிராஜா ஆயிடுவியா ?அன்னக்கொடி -அலசல்

"அன்னக்கொடி" டைரக்டருக்கு பெரிய பாரதிராஜான்னு நினைப்பு போல...
கொய்யால அரடஜன் ஆட்டுக் குட்டியையும் லவுக்க போடாத பொம்பளைய காட்டுனா நீயெல்லாம் பாரதிராஜா ஆயிடுவியா ? மொதல்ல ஹீரோயின் ஹேர்ஸ்டைல மாத்துங்கயா, ஐப்ரோ கொஞ்சம் தூக்கலா இருக்கு. அதுகூட பரவா இல்ல படத்துல ஒரு வில்லன் நடிகர அறிமுகபடுத்தி இருக்காங்க, படமுழுக்க அவரு தான் சுத்தி சுத்தி வராரு,எதாவது பெரிய இடத்து புள்ளையா

சாதியம் பேசும் பல யோக்கியஸ்தர்களின் லட்சனம்

சாதியம் பேசும் பல யோக்கியஸ்தர்கள் தன குடும்பத்தில் உள்ள அக்கா தங்கைகளை,அண்ணன் தம்பிகளை மாற்று சாதிகாரர்களுக்கு மணமுடிக்க ஒத்துகொள்வார்களா ?குறிப்பாக தலித் அல்லாதோர் தலித்துக்கும் , தலித்துகள் அருந்ததியினருக்கும் மணமுடிக்க முன்னிர்பார்களா?

ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயமாக வரன் தேடும் வேலை இருந்துகொண்டு தான் இருக்கிறது,
யாரவது படிப்பையும் , பண்பையும் மட்டும் முன்னிறுத்தி வரன் தேடுகிறார்களா ?
இல்லவே இல்லையே!!!
வரன் தேடலில் முதற்படியே சாதியிலிருந்து தானே தொடங்குகிறார்கள்...
இல்லையென்று மறுக்க பொது மேடையிலும் முகநூலிலும் மட்டும் தான் முடியும் -ஆனால் 
மனசாட்சிக்கு தெரியும் நமது வீட்டு வரன் தேடுதலின் லட்சணம் ..

இலவச கழிப்பறை இல்லாதது ஏன் ?

பெரும்பாலான நகர பேருந்து நிலையங்களில் இடுப்பளவு சுவர் எழுப்பிய ஆண்களுக்கான இலவச கழிப்பறையை தான் பார்க்க முடிகிறது. ஆனால் பெண்களுக்கென்று முழுமையான சுவரெழுப்பிய இலவச கழிப்பறை இல்லாதது ஏன் ?

சுச்ச்சா என்பது இருபாலருக்கும் வருவது தானே ...அதிலென்ன ஆண்களுக்கு இலவசம் பெண்களுக்கு மட்டும் கட்டணம் ???

பண்டிகை நாட்களிலாவது பழசுக்கு திரும்புவோம் - பூவரச இலை கொழுக்கட்டை

எங்கள் ஊரில் இலையை பயன்படுத்தியே கொழுக்கட்டை செய்வார்கள். விநாயகர் சதுர்த்தி வந்து விட்டால் போதும் ஒவ்வொரு வீட்டில் உள்ள ஆம்பள பசங்க எல்லாம் குரங்கா மாறிடுவோம். ஆளுக்கு ஒரு பூவரசு மரத்த தேர்ந்தெடுத்து ஏறி நல்ல முற்றிய பெரிய இலையாக பார்த்து நாற்பது ஐம்பது இலையை பறித்து கொண்டு வீடு செல்வோம். அன்று மட்டும் நாங்கள் சொன்ன பேச்சை கேட்கும் நல்ல பிள்ளைகள் .கொழுக்கட்டை வெந்து தட்டிற்கு வரும்வரை என்ன வேலை சொன்னாலும் தட்டாமல் செய்வோம், அவ்வளவு நல்ல பிள்ளைகள். 

இலையோடு வெந்த அந்த கொழுக்கட்டையின் வாசம் அப்பப்பா அவ்வளவு அருமையாக இருக்கும். அந்த ஆவி பறக்கும் சூட்டோடு அந்த பூவரசு இலையை உரித்து

2 மாதத்தில் சிகரெட்டை விட ...

(என்னுடைய அனுபவத்துல சொல்றேன் -நான் 7 வருடங்களுக்கு மேலாக குடித்த நான் இந்த கருமத்தை விட்டு தற்போது இரண்டு வருடங்களை தாண்டியாகிவிட்டது ...

இப்போது அந்த வாடை எனக்கு நுகரும் போது குடலை பிரட்டி வாந்தி வருவது போல உணருகிறேன்.

இப்படி தானே நான் குடிக்கும் போது அருகில் இருப்பவர்களுக்கு இருந்திருக்கும்,அதை நினைக்கும் போது என்னை நினைத்து இப்போதும் வேட்கபடுகிறேன்

இது அட்வைஸ் இல்லங்க இப்படியும் முயற்சி செய்து பார்க்கலாம்னு சொல்றேன் ..ஏன்னா நான் இந்த கருமத்த குடிக்கும் போது யார் அட்வைஸ் சொன்னாலும் கோவம் தான் வந்தது ...)

வழக்கமாக பழகும் நண்பர்களை ஒரு சில மாதங்களுக்கு தள்ளி வையுங்கள் ...
புது புது நண்பர்களுடன் பழகுங்கள் ...அப்போது தான் அவர்கள் முன் சிகரட் குடிக்க தயக்கம் வரும்,தவறாக எடுத்துகொள்வார்கள் என்று ...

சும்மா இருக்கும் நேரங்களில் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கோவிலுக்கு சென்று நேரத்தை கழிங்கள் ,ஏனென்றால் அங்கு சிகரட் குடிக்க வாய்ப்பிருக்காது ... முடிந்தால் நூலகங்களுக்கு செல்லுங்கள் ....

தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பொது இடை நில்லா பேருந்தாக பார்த்து ஏறுங்கள் ...

பாக்கெட்டில் சில்லறை பணம் வைப்பதை தவிருங்கள் ...

சிகரட் குடிக்க தோன்றும் போது தம்முடைய பெற்றோரையும் மணமாகி இருந்தால் தன்னுடைய மனைவியையும் பிள்ளைகளில் எதிர்காலத்தை நினைத்துகொள்ளுங்கள்

தனிமையில் இருப்பதை தவிருங்கள்...

சிகரட் குடிக்க வேண்டும் என்று தோன்றும்போது வானத்தை நோக்கி தலையை அண்ணாந்து காரி உமிழுங்கள் ...ஏனென்றால் உங்கள் முகத்தின் மீதே அந்த உமிழ் நீர் அசிங்கபடுத்தும்...மறுமுறை துப்ப தோணாது ...

30 கட்டம் போட்டு ஒரு அட்டையை எப்போதும் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள் , ஒருவொரு நாளும் சிகரட் குடிக்காமல் இருக்கும் போது அந்த அட்டையில் டிக் செய்து கொள்ளுங்கள்...அது உங்களின் முயற்சியை ஊக்கபடுத்தும் ...

முக்கியமாக உங்களை நீங்களே பாராட்ட பழகி கொள்ளுங்கள் ....

இப்படியே கஷ்டப்பட்டு ஓரிரு மாதங்கள் கடைபிடியுங்கள் ...பிறகு பாருங்கள் அந்த கேட்ட பழக்கம் உங்களை நெருங்கவே பயப்படும் ...உங்கள் மீது மற்றவர்கள் கொண்டுள்ள மரியாதையை நினைத்து நீங்களே அசந்து போவீர்கள் ...

(இதில் ஒரு நாள் தவறவிட்டாலும் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிகொள்ளும் )