headline photo

மதுவின் பரிசு விரைவில் நம் பிள்ளைகளை தேடி!!!

Tuesday, September 17, 2013

உயிர் குடிக்கும் பாலியல்! 
மதுவின் பரிசு விரைவில் நம் பிள்ளைகளை தேடி!!!

3 வயது மகளுக்கு மது கொடுத்து, கண்ணை கட்டி கற்பழித்த குடிகாரத் தந்தை.
செங்துங்கநல்லூரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்
மீண்டும் ஒரு பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம்.
டெல்லியில் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம்.
3 ,1/2வயது பள்ளி குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி உரிமையாளரின் கணவர் .
14 வயது மாணவியை வகுப்பறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்.
மூன்று வயது குழந்தையை பலாத்காரம் செய்த தந்தை தலை

எழுத்தில், திரையில், பொதுவில் ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள்?

எழுத்தில், திரையில், பொதுவில்... ஆண்கள் என்றால் பொறுப்பற்ற பொறுக்கிகள் என்ற சித்திரம் பின்னப்பட்டிருக்கிறது. இது முழு பொய் இல்லை, முழு உண்மையும் இல்லை. முப்பதைக் கடந்த வயதில்... தங்கையின் திருமணம், அக்காவின் பேறுகாலம் என நில்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்கள் அநேகம் பேர். இ.எம்.ஐ.யில் பணம் செலுத்தி தங்கச்சி மாப்பிள்ளைக்கு ஸ்பெலண்டர் பிளஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு 27B-க்கு காத்துக்கிடக்கும் இளைஞர்கள் எத்தனையே பேர்!

அரடஜன் ஆட்டுக் குட்டியையும் லவுக்க போடாத பொம்பளைய காட்டுனா நீயெல்லாம் பாரதிராஜா ஆயிடுவியா ?அன்னக்கொடி -அலசல்

"அன்னக்கொடி" டைரக்டருக்கு பெரிய பாரதிராஜான்னு நினைப்பு போல...
கொய்யால அரடஜன் ஆட்டுக் குட்டியையும் லவுக்க போடாத பொம்பளைய காட்டுனா நீயெல்லாம் பாரதிராஜா ஆயிடுவியா ? மொதல்ல ஹீரோயின் ஹேர்ஸ்டைல மாத்துங்கயா, ஐப்ரோ கொஞ்சம் தூக்கலா இருக்கு. அதுகூட பரவா இல்ல படத்துல ஒரு வில்லன் நடிகர அறிமுகபடுத்தி இருக்காங்க, படமுழுக்க அவரு தான் சுத்தி சுத்தி வராரு,எதாவது பெரிய இடத்து புள்ளையா

சாதியம் பேசும் பல யோக்கியஸ்தர்களின் லட்சனம்

சாதியம் பேசும் பல யோக்கியஸ்தர்கள் தன குடும்பத்தில் உள்ள அக்கா தங்கைகளை,அண்ணன் தம்பிகளை மாற்று சாதிகாரர்களுக்கு மணமுடிக்க ஒத்துகொள்வார்களா ?குறிப்பாக தலித் அல்லாதோர் தலித்துக்கும் , தலித்துகள் அருந்ததியினருக்கும் மணமுடிக்க முன்னிர்பார்களா?

ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயமாக வரன் தேடும் வேலை இருந்துகொண்டு தான் இருக்கிறது,
யாரவது படிப்பையும் , பண்பையும் மட்டும் முன்னிறுத்தி வரன் தேடுகிறார்களா ?
இல்லவே இல்லையே!!!
வரன் தேடலில் முதற்படியே சாதியிலிருந்து தானே தொடங்குகிறார்கள்...
இல்லையென்று மறுக்க பொது மேடையிலும் முகநூலிலும் மட்டும் தான் முடியும் -ஆனால் 
மனசாட்சிக்கு தெரியும் நமது வீட்டு வரன் தேடுதலின் லட்சணம் ..

இலவச கழிப்பறை இல்லாதது ஏன் ?

பெரும்பாலான நகர பேருந்து நிலையங்களில் இடுப்பளவு சுவர் எழுப்பிய ஆண்களுக்கான இலவச கழிப்பறையை தான் பார்க்க முடிகிறது. ஆனால் பெண்களுக்கென்று முழுமையான சுவரெழுப்பிய இலவச கழிப்பறை இல்லாதது ஏன் ?

சுச்ச்சா என்பது இருபாலருக்கும் வருவது தானே ...அதிலென்ன ஆண்களுக்கு இலவசம் பெண்களுக்கு மட்டும் கட்டணம் ???

பண்டிகை நாட்களிலாவது பழசுக்கு திரும்புவோம் - பூவரச இலை கொழுக்கட்டை

எங்கள் ஊரில் இலையை பயன்படுத்தியே கொழுக்கட்டை செய்வார்கள். விநாயகர் சதுர்த்தி வந்து விட்டால் போதும் ஒவ்வொரு வீட்டில் உள்ள ஆம்பள பசங்க எல்லாம் குரங்கா மாறிடுவோம். ஆளுக்கு ஒரு பூவரசு மரத்த தேர்ந்தெடுத்து ஏறி நல்ல முற்றிய பெரிய இலையாக பார்த்து நாற்பது ஐம்பது இலையை பறித்து கொண்டு வீடு செல்வோம். அன்று மட்டும் நாங்கள் சொன்ன பேச்சை கேட்கும் நல்ல பிள்ளைகள் .கொழுக்கட்டை வெந்து தட்டிற்கு வரும்வரை என்ன வேலை சொன்னாலும் தட்டாமல் செய்வோம், அவ்வளவு நல்ல பிள்ளைகள். 

இலையோடு வெந்த அந்த கொழுக்கட்டையின் வாசம் அப்பப்பா அவ்வளவு அருமையாக இருக்கும். அந்த ஆவி பறக்கும் சூட்டோடு அந்த பூவரசு இலையை உரித்து

2 மாதத்தில் சிகரெட்டை விட ...

(என்னுடைய அனுபவத்துல சொல்றேன் -நான் 7 வருடங்களுக்கு மேலாக குடித்த நான் இந்த கருமத்தை விட்டு தற்போது இரண்டு வருடங்களை தாண்டியாகிவிட்டது ...

இப்போது அந்த வாடை எனக்கு நுகரும் போது குடலை பிரட்டி வாந்தி வருவது போல உணருகிறேன்.

இப்படி தானே நான் குடிக்கும் போது அருகில் இருப்பவர்களுக்கு இருந்திருக்கும்,அதை நினைக்கும் போது என்னை நினைத்து இப்போதும் வேட்கபடுகிறேன்

இது அட்வைஸ் இல்லங்க இப்படியும் முயற்சி செய்து பார்க்கலாம்னு சொல்றேன் ..ஏன்னா நான் இந்த கருமத்த குடிக்கும் போது யார் அட்வைஸ் சொன்னாலும் கோவம் தான் வந்தது ...)

வழக்கமாக பழகும் நண்பர்களை ஒரு சில மாதங்களுக்கு தள்ளி வையுங்கள் ...
புது புது நண்பர்களுடன் பழகுங்கள் ...அப்போது தான் அவர்கள் முன் சிகரட் குடிக்க தயக்கம் வரும்,தவறாக எடுத்துகொள்வார்கள் என்று ...

சும்மா இருக்கும் நேரங்களில் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கோவிலுக்கு சென்று நேரத்தை கழிங்கள் ,ஏனென்றால் அங்கு சிகரட் குடிக்க வாய்ப்பிருக்காது ... முடிந்தால் நூலகங்களுக்கு செல்லுங்கள் ....

தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பொது இடை நில்லா பேருந்தாக பார்த்து ஏறுங்கள் ...

பாக்கெட்டில் சில்லறை பணம் வைப்பதை தவிருங்கள் ...

சிகரட் குடிக்க தோன்றும் போது தம்முடைய பெற்றோரையும் மணமாகி இருந்தால் தன்னுடைய மனைவியையும் பிள்ளைகளில் எதிர்காலத்தை நினைத்துகொள்ளுங்கள்

தனிமையில் இருப்பதை தவிருங்கள்...

சிகரட் குடிக்க வேண்டும் என்று தோன்றும்போது வானத்தை நோக்கி தலையை அண்ணாந்து காரி உமிழுங்கள் ...ஏனென்றால் உங்கள் முகத்தின் மீதே அந்த உமிழ் நீர் அசிங்கபடுத்தும்...மறுமுறை துப்ப தோணாது ...

30 கட்டம் போட்டு ஒரு அட்டையை எப்போதும் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள் , ஒருவொரு நாளும் சிகரட் குடிக்காமல் இருக்கும் போது அந்த அட்டையில் டிக் செய்து கொள்ளுங்கள்...அது உங்களின் முயற்சியை ஊக்கபடுத்தும் ...

முக்கியமாக உங்களை நீங்களே பாராட்ட பழகி கொள்ளுங்கள் ....

இப்படியே கஷ்டப்பட்டு ஓரிரு மாதங்கள் கடைபிடியுங்கள் ...பிறகு பாருங்கள் அந்த கேட்ட பழக்கம் உங்களை நெருங்கவே பயப்படும் ...உங்கள் மீது மற்றவர்கள் கொண்டுள்ள மரியாதையை நினைத்து நீங்களே அசந்து போவீர்கள் ...

(இதில் ஒரு நாள் தவறவிட்டாலும் வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிகொள்ளும் )

எருக்கன் செடி ஜோசியம்

சிறுவயதில் நாங்கள் இதனுடைய மொட்டை வைத்து குறிகேட்பது வழக்கம். இன்றுவ வாத்தியார் அடிப்பாரா என்று இதன் மொட்டை அழுத்தினால் டப் என்று சத்தம் வந்தால் அன்று வாத்தியார் அடிக்கமாட்டார் என்பது நம்பிக்கை, மாறாக டப் சத்தம் வரலன்னா அடி பின்னிடுவார்னு அன்று முழுக்க பயந்தே வகுப்புகள் நகரும். இதுல என்ன கூத்துன்னா காக்கை உட்கார பனம் பழம் விழுவது போல பல நேரங்களில் எருக்கன் ஜோசியம் பலித்துவிடும்.

ருக்கஞ்செடிகளில் பல வகைகள் உண்டு. அனைத்து வகைகளிலும் பூக்கள் இருக்கும். பால் வடியும், பார்ப்பதற்கு ஒரே விதமாய்த் தெரியும்.

படம் முடிந்தாலும் அலைகள் நம் காதுகளில் ஒலித்துகொண்டே இருக்கும் - நீர்ப்பறவை

எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்று . மீனவர் கிராமம் ,மீன் பிடி மக்கள் அவர்களின் கட்டுபாடுகள் பறந்து விரிந்த கடலின் இயற்கையான காட்சியமைப்புகள் அருமை . கதாபாத்திரம் அனைவரும் நம்மில் ஒருவரை போன்று நடிப்பில் எந்த வித செயற்கை தனைத்தையும் புகுத்தாமல் அருமையாக அனைவரையும் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் . முழுக்க முழுக்க கடற்கரை சார்ந்தே படமாக்கி உள்ளார் .படம் முடிந்தாலும் அலைகள் நம் காதுகளில் ஒலித்துகொண்டே இருக்கும் . மொத்தத்தில்

நம்ம ஊர்கார பொண்ணுங்கள நாமளே புரிஞ்சுகளனா வேறு யாரு புரிஞ்சுகுவா ?

லேண்ட் சம்மந்தமா தொடர்பு கொள்ளும் பெண் பிள்ளைகளிடம் (Telecaller) கடுமையாக பேசி கட் செய்ய மனம் வரவில்லை.

பெரும்பாலும் ஏதோ ஒரு டிகிரி முடித்து குடும்ப சூழலின் காரணமாக சென்னைக்கு வந்து மாதம் 4000 முதல் ஆரம்பித்த இந்த டெலிகாலர் வேலை செய்கிறார்கள்.
ஒரு லேண்ட் விற்றால் இன்சென்டிவ் என்ற பெயரில் 2000 ஆயிரத்திற்கும் கம்மியாகவே கொடுகிறார்கள். 
100க்கு 70 சதவீதமான பெண்களுக்கு ஆங்கிலம் பேச அவ்வளவாக வருவதில்லை, காரணம் அரசாங்க பள்ளிகள். அதற்காக பள்ளிகளை முழுமையாக குறைகூற முடியாது.

நீங்கள் நினைப்பது போல இவர்கள் தஸ் புஸ்ஸேன்று ஆங்கில பேசி பன்னாட்டு நிறுவனத்தில் டெலிகாலர் பணியில் இருபதாயிரமோ முப்பதாயிராமோ சம்பளம் வாங்கி ஸ்பென்சருக்கும் சத்தியம் தியேட்டருக்கும் சென்று செலவு செய்பவர்கள் அல்ல.
பெண்கள் விடுதியில் தங்கினால் செலவு அதிகம் என்பதால் தங்களுக்கு பாதுகாப்பு குறைவு என்றாலும் வேறுவழியின்றி தனியாக அறையெடுத்து நான்கைந்து பெண்களாக பகிர்ந்து தங்கி பணத்தை மிச்சபடுத்தி பெற்றவர்களுக்கு அனுப்புகிறார்கள்.

எல்லாம் நம்ம ஊர்ல இருந்து வந்த பொண்ணுங்க தாங்க , தயவுசெய்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். தங்களுக்கு தேவையில்லை என்றால் வேண்டாம் என்று சாந்தமாக பேசி தொடர்பை துண்டியுங்கள். சில பேர் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் நச்சரிக்கிறார்கள் என்று நீங்கலாம், நச்சரிக்க வேண்டுமென்பது அவர்கள் விருப்பமா என்ன ? இல்லை அப்படி அவர்களுக்கு சொல்லி தந்து பழக்கி இருக்கிறார்கள். அப்படி பேசினால் தான் சம்பளம் கிடைக்கும் .

நம்ம ஊர்கார பொண்ணுங்கள நாமளே புரிஞ்சுகளனா வேறு யாரு புரிஞ்சுகுவா ?

(எனக்கு தெரிந்த நம்ம ஊர்க்கார பெண்ணை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எதேச்சையாக சந்தித்த போது அவர் தன்னுடைய வேலையை பத்தி சொன்ன போது என்னுள் ஏற்பட்ட தாக்கத்தை இங்கே பதிவிட்டுளேன்)

நீதானே என் பொன் வசந்தம்" என் நினைவுகளை தூசு தட்டிய திரை பதிவு

என்ன தான் லவ் பண்ணி உன்னை திருமணம் செஞ்சாலும், காதலிக்கும் போது நமக்குள் நித்தம் நடந்த ஈகோ, சண்டை,கோப பட்டு செல் போனை அணைத்துவிட்டு பின் உள்ளுக்குள் உயிரை பிசைந்த அந்த வலி , திருட்டுதனமாக உன்னை பார்க்க நேரிட்ட நாட்கள் , நீண்ட நாள் பிரிவு மீண்டும் சந்திப்பு , ஒரு முத்தமாவது கிடைத்தால் போதுமென்று தவித்த அந்த ஏக்கம்

வாசிப்பு பழக்கத்தை வலுப்படுதியத்தில் ராணி காமிக்ஸ்

ராணி காமிக்ஸ் தமிழில் வெளிவந்த ஒரு வரைகதை இதழ். 1984 தொடக்கம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு இளையோரிடம் பெரும் வரவேற்பு பெற்ற இவ் இதழ்கள் தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றின் வருகையுடன் நலிந்து, அதன் 500 ஆவது இதழுடன் நின்றுபோனது. பெரும்பாலான இதழ்கள் அமெரிக்க ஐரோப்பிய வரைகதைளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. இதில் வெளியான ஜேம்ஸ் பாண்ட், மாயாவி

பசுக்களும் எருமைகளும் என்ன பாவம் செய்தன ?

இதனை நான் சொல்வதனால் ஒரு சிலருக்கு முக சுளிப்பை ஏற்படுத்தலாம் ,ஆனாலும் அவற்றின் உணர்வையும் புரிந்துகொள்வோமே !!! 

முன்பெல்லாம் கிரமாத்தில் பெண்கள் கூட மாடுகளை காளைக்கு இட்டு செல்வார்கள் எந்தவித முகசுழிப்பும் இல்லாமல் .அந்த வகையில் நான் கூறும் இந்த செய்தி யாருக்கும் முகசுளிப்பை ஏற்படுத்தாது என்று நம்புகிறேன் .

முன்பெல்லாம் பசு மாடோ அல்லது எருமை மாடோ அதனை சினைபிடிக்க வைக்க காளைக்கு வைப்பார்கள் ,அதாவது இயற்கையான முறையில் உறவை மேற்கொள்ள வைப்பார்கள்.அதன் மூலமாக தான் அந்த மாடுகள் குட்டி ஈன்று தாயும் சேயும் நல்ல ஆரோக்கயதுடன் இருக்கும் .

ஆனால் தற்போது எந்த வித தாம்பத்யமும் இல்லாமல் சினை ஊசியின் மூலமாக நேரடியாக கற்பபையில் வைத்து கருத்தரிக்க வைக்கிறார்கள் .அதனால் பயனடையும் நமக்கு வேண்டுமானால் அது சிறந்ததாக இருக்கலாம்,ஆனால் அந்த மாடுகள் பிறந்து, தன் பருவநிலை காலத்தில் வாழ்ந்து எந்த வித தாம்பத்ய சுகத்தையும் அனுபவிக்காமல் தன் வாழ்நாட்களை முடித்துகொள்ளும் அவற்றின் கொடூரத்தை நாம் புரிந்துகொள்வது இல்லை. (பசு ,எருமை போன்று இன்னும் ஒரு சில மிருகங்களும் இந்த வேதனைக்கு ஆட்படுத்தபடுகின்றன).

இச்சை என்பது மனிதனுக்கு மட்டும் தானா? மாடுகளுக்கெல்லாம் வரகூடதா? எத்தனையோ மிருகங்கள் தனது இஸ்டத்திற்கு தனக்கு தோன்றும் நேரத்தில் தனது இச்சையை தீர்த்துகொள்ளும் போது பாவம் இந்த பசுக்களும் எருமைகளும் என்ன பாவம் செய்தன ?
அவைகளுக்கு தீர்வு தான் என்ன ?

தயவுசெய்து வேண்டாமே !!!

ஒருத்தனால மொத்த பேரும் மேல போயிருப்போம்...
அதிகாலை தூக்கம் படு மோசமானது, அதனிடம் விளையாடுவது ஆபத்துடன் விளையாடுவது போன்று. அப்டியே ஆளை சாய்ச்சுபுடும்... 

கடந்த ஞாயிறு நள்ளிரவு 1.30 மணி அளவில் சென்னைக்கு செல்வதற்காக திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். நீண்ட நேரமாக எந்த பேருந்தும் வரவில்லை. நேரம் கடந்து கொண்டே போனது ஆனால் பேருந்து வந்தபாடில்லை. நேரக்காப்பாளரிடம் கேட்டபோது 3 மணிக்கு மேல்

பச்சைத்தமிழன் டாக்டர் ராமதாசைப் பாராட்டாமலிருக்க முடியவில்லை.

பச்சைத்தமிழன் டாக்டர் ராமதாசைப் பாராட்டாமலிருக்க முடியவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் பல திராவிட தலைவர்கள் பேசத்தயங்கும் தமிழர்கள் இழந்த பாரம்பரிய தமிழ் மண்ணை மீட்கும் விடயம் பற்றி துணிந்து பேசியும் யாரும் இதுவரை அவரைப் பாராட்டி ஒரு பதிவைக் கூடப் போடக் காணோம். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகத்தை சரி செய்ய வேண்டும் எனக் குரலெழுப்பும் திரு ராமதாஸ் அவர்களை தமிழன் என்ற முறையில் பாராட்டாமலிருக்க என்னால் முடியவில்லை.

ஆபாசத்தை விட அறிந்து கொள்ளகூடிய விசயங்கள் பல...

எனக்கு தெரிந்த நண்பரின் சகோதரி மார்பக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு முற்றிய நிலையில் காப்பாற்ற முடியாமல் இறந்த சம்பவம் என்னை வெகுவாக பாதித்ததின் தாக்கத்தால் இந்த பதிவை மீண்டும் உங்கள் முன் பதிவிடுகிறேன் ...

அது சரி அதுக்காக இப்படி ஒரு ஆபச படத்தை ஏன் போட்டீர்கள் என்று நீங்கள் கேட்ட்கலாம் ,நாம் தினந்தோறும் பார்க்கும் தமிழ் மற்றும் ஆங்கில தொலைக்காட்சி விளம்பரங்களை விடவா ???

சரி விடுங்க இதுவும் ஒரு விழிப்புணர்வு விளம்பராமாகவே இருக்கட்டுமே !!!

நம் ஒவ்வொருவர் வீட்டிலும் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் நிச்சயம்

சாராயம் விற்கும் பட்டதாரிகளின் நிலை!

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்களாக பணிபுரியும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை யாராலும் இன்னும் உரக்கப் பேசப்படவில்லை. அவர்கள் என்ன சரக்கு விற்கவா கல்லூரிப் படித்துவிட்டு வந்தார்கள்? ‘இதுவும் ஒரு வேலையே’ என அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், பொதுச்சூழல் அவ்வாறு இல்லை. திருமணத்துக்குப் பெண் அமைவது முதல் மணமான வாழ்வின் தினவாழ்க்கை வரை எல்லாமே சங்கடங்களால் நிறைந்தது. ‘‘உன் வீட்டுக்காரர் எங்க வேலைப் பார்க்குறார்?’’ எனக் கேட்டால் அவர்களின் மனைவிமார்கள் என்ன பதில் சொல்வார்கள்? நிச்சயம் அவர்கள் ஏதேனும் ஒரு பொய் சொல்லவும், அது அம்பலப்படும்போது சங்கடமாய் தலையசைக்கவும் இந்நேரம் பழகியிருப்பார்கள்.

சாதிவெறியை போதிக்கும் மீடியா?

ஜாதியை காரணம் காட்டி தடுக்கப்பட்ட காதல்கள் தான் மீடியாவின் வாயிலாக நம்மை வந்தைடைகிறது. அந்த மாதிரியான நிகழ்வுகள் மிஞ்சி போனால் விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் தகுதியின் அடிப்படையில் வாழ்கையை பற்றிய புரிதல் இல்லாமல் உடற்பசியை நோக்கமாக , இனக்கவர்ச்சியின் காரணமாக உருவான ஏராளனமான காதல்களை பெற்றோர்கள் நிராகரித்து கொண்டு தான் இருக்கிறார்கள் அது நமது பார்வைக்கு புலப்படாமலே இருந்து விடுகின்றன .
நமக்கு தெரிந்தது எல்லாம் காதலுக்கு எதிரி சாதி மட்டுமே தான் அதனை நமக்கு போதிக்க பல மீடியாக்கள் போட்டி போட்டுகொண்டு செயல்படுகிறார்கள்.சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் இந்த மீடியாக்கள் தான் சாதிவெறியை தூண்டுவதில் முதன்மையாக செயல்படுகிறார்கள் . காசுக்காகா ........

விந்துக்களை பாய்ச்சி விளையாட நீங்கள் ஏற்படுத்திய களம் தான் காதலா ?

இருவரின் உடற்பசிக்காக ஒரு சிறு பிஞ்சின் வாழ்நாட்களையே அனாதை விடுதியில் பசிக்காக கையேந்த விடுவது தான் உங்கள் தெய்வீக (தேவிடியா) காதலா ?

ஏதோ ஒரு அவசரத்துல காதலிச்சு எதுக்காக காதலிக்கறோம், உண்மைலயே இதுதான் காதலானு எதுவுமே தெரியாம பண்ற அவசரக் காதலர்களோட வாழ்க்கை சம்பவங்கள்தான்

சாதியை ஒரு அடையாள சின்னமாக மட்டும் பார்த்தால் வன்முறைக்கு வேலையே இல்லை...

நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த சுமையை தற்போது எனது முகநூல் நண்பர்கள் 5000 பேருக்கும் முன்பு எனது ஆதங்கத்தை வெளிபடுதுகிறேன் .

பல நண்பர்களை கொண்டுள்ள நான் சிறிது நாட்களாக சில நண்பர்களின் பார்வைக்கு எதிரியாக சித்தரிக்க பட்டுளேன். காரணம் சில நேரங்களில் என்னுடைய சாதிய வெளிபாடு!!!

என்னை பொறுத்தவரை நான் சாதிய அடையாளத்தோடு இருப்பதை பெருமையாக தான் நினைக்கிறேன். அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. என் தந்தை, என் பாட்டன் , என் வம்சம், என் குல தெய்வம் என் இனம் இப்படி என்னுடைய அடையாளத்தை

பருவ வயது தூண்டலுக்கும்(Infatuation) காதலுக்கும் வித்தியாசமறியா முற்போக்குவியாதி!

Monday, September 16, 2013

//18 வயசுல ஒரு பையனும் பொண்ணும் அவங்க விரும்பனா சுதந்திரமா திருமணம் செய்துகொள்ளலாம் என்று அரசாங்கமே சுதந்திரமும் அங்கீகாரமும் கொடுக்கும் போது நீங்க (பெற்றவர்கள்) எதற்கு  தடையாக அவர்களை தடுக்கிறீர்கள் கண்டிக்கிறீர்கள்? இதுதான் சென்ற வார நீயா நானாவில் மனுஷ்ய புத்திரன் வாதம்/ /
                   ------------------------------------------------------------------------------
வாதம் என்று வரும் போது அடுத்தவரும் பேச வாய்பளிக்க வேண்டும் என்ற உணர்வும், அடுத்தவர் தனது கருத்தை, வாதத்தை வெளிப்படுத்தும் போது ...

தஞ்சை தேவா FB

எனது முகநூல் பயனுள்ள பதிவுகளையும் அதற்கான நணபர்களின் கருத்துரைகளையும் சேகரிக்கும் புதிய முயற்சி தான் இந்த "தஞ்சை தேவா FB" தளம். முகநூல் என்ற கடலில் நண்பர்களின்  நல்ல பல கருத்துரைகளை தேவைப்படும் போது தேடுவது கடினமான காரியமாகிவிடுகிறது. அதனை எளிமையாக்கவே இந்த புதிய முயற்சி.
நம் கருத்தை வெளிப்படுத்தும் போதும், முதன்மைபடுத்தும் போது பல நல்ல எதிர்மறை கருத்துகளின் ஆழத்தை புரிந்துகொள்ள மறுக்கிறோம். சிறிது ஆறப்போட்டு நோக்குவதன் மூலம் அதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள இலகுவாகிறது.