சிறுவயதில் நாங்கள் இதனுடைய மொட்டை வைத்து குறிகேட்பது வழக்கம். இன்றுவ வாத்தியார் அடிப்பாரா என்று இதன் மொட்டை அழுத்தினால் டப் என்று சத்தம் வந்தால் அன்று வாத்தியார் அடிக்கமாட்டார் என்பது நம்பிக்கை, மாறாக டப் சத்தம் வரலன்னா அடி பின்னிடுவார்னு அன்று முழுக்க பயந்தே வகுப்புகள் நகரும். இதுல என்ன கூத்துன்னா காக்கை உட்கார பனம் பழம் விழுவது போல பல நேரங்களில் எருக்கன் ஜோசியம் பலித்துவிடும்.
எருக்கஞ்செடிகளில் பல வகைகள் உண்டு. அனைத்து வகைகளிலும் பூக்கள் இருக்கும். பால் வடியும், பார்ப்பதற்கு ஒரே விதமாய்த் தெரியும்.
ஆனால் அதில் வரும் மொட்டுக்கள், பூக்களின் நிறம், மணம், குணம் ஆகியவை மாறுபட்டு இருக்கும். சிறிய பூக்கள், காய்களின் வடிவில் இருக்கும். அதை விரல்களால் அழுத்தினால் உடைந்துவிடும். இதனுள் விதைகள் இருக்கும். இதன் இலைகள், பூக்கள், தண்டு, வேர் அனைத்து பாகங்களிலும் பால் இருக்கும். அவைகளையும் உடைத்தால் பால் வடியும்.
எருக்கஞ்செடிகள் அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
இது உடலின் உஷ்ணத்தை அதிகரிக்கும். குறிப்பாக வெள்ளை எருக்கன் செடிக்கு விசேஷ மருத்துவக் குணங்கள் இருக்கின்றன.
இலைகளின் மருத்துவ குணங்கள்: சிலருக்கு முகம் அழகாக இருக்கும். ஆனால், பல் அசிங்கமாக இருக்கும். முத்துப் போன்ற பற்களில் மஞ்சள்நிறக் கரைகள் படிந்து முகத்தின் அழகையே கெடுத்துவிடும். இதைப் போக்கி பற்களை பளபளப்பாக்கிட எருக்கு இலைகளை நிழலில் உலர வைத்து அத்துடன் மிளகு சம அளவில் சேர்த்து, அரைத்து பவுடராக்கிக் கொள்ள வேண்டும். இதைப் பல் பொடியாக, பல்லில் தேய்த்தால் கரைகள் நீங்கும்.
இலைகளை நல்லெண்ணெயில் கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டிய எண்ணெயை மூட்டு வலி, மூட்டு வாதம், இடுப்பு வலி, தொண்டை நரம்பு வலி ஆகியவற்றுக்கு வலியுள்ள பாகத்தில் பூசினால் குணமாகும்.
இலைகளை எரித்து, அதன் புகையை முகர்ந்தால் - வாய் வழியாகச் சுவாசித்தால், மார்ப்புச்சளி வெளியேறும். ஆஸ்துமா, இருமல் கட்டுப்படும்.
இலைகளை நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொள்வார்கள். பக்கவாதம் நீங்கிட இதைத் தடவி மசாஜ் செய்வார்கள்.
இலைகளின் சாற்றை கடுமையான தோல்நோய் நீங்க பூசுவார்கள்.
உலர்ந்த எருக்கம் இலைகளைப் பவுடராக்கி, அடிபட்ட காயங்கள், புண் அழுகிப்போன சதையின் மீது தூவி கட்டுக்கட்டுவார்கள். அதனால் விரைவில் குணமடையும்.
இதன் இலைகள், பூக்கள், வேர், பட்டைகள், எண்ணெய் அனைத்துமே நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்தது.
மொட்டுகளின் மருத்துவ குணங்கள்:
எருக்கம் மொட்டுக்கள், சுத்தமான தேன், பசு நெய் - மூன்றையும் சேர்த்து அரைத்து இதை ஆண்குறியின் தண்டின் மேல் பாகத்தில் பூசினால் விரைப்பு தன்மை அதிகரிக்கும். எண்ணையைப் பூசிய பிறகு ஆண்குறியின் மீது ஆமணக்கு இலையைக் கட்ட வேண்டும்.
வியர்வையுடனும், நடுக்கத்துடனும் குளிர் ஜுரம் ஏற்படும். அது குறித்த நேரத்தில் தான் வரும். ஜுரம் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எருக்கம் மொட்டு ஒன்றை எடுத்து வெல்லத்தில் வைத்து சாப்பிட்டால் மலேரியா ஜுரம் நீங்கும்.
இதன் மொட்டுக்கள், சுக்கு, ஓமம், கறுப்பு உப்பு ஆகிய பொருட்களையும் மெல்லியதாக பொடியாக்கி, சிறிது தண்ணீர் கலந்து, பட்டாணி அளவிற்கு மாத்திரைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். தினசரி 2 மாத்திரைகள் வீதம் 2 வேளைகள் சாப்பிட்டு வந்தால் அஜீரணம், பசியின்மை, கேஸ்டிரபுள், உப்புசம் ஆகியவை நீங்கி வயிற்றுக்கும் சக்தி தரும்.பூக்களின் மருத்துவ குணங்கள்
எருக்கம் செடிகளையும், பூக்களையும் எரித்து அதன் சாம்பலை ஆஸ்துமா, மார்புச்சளி நீங்கிட அரிசி அளவிற்குத் தருவார்கள்.
காலரா, வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் ஏற்பட்டு உடல் வெகு சீக்கிரம் பலவீனமடைந்து விடும். இந்நிலையில் 2 எருக்கம் பூக்களை வாயில் போட்டு நன்றாக மென்றால் சுய நினைவு திரும்பும்.
வேரின் மேல் தோல், மிளகு - இரண்டையும் சம அளவில் இடித்துப் பொடியாக்கி அதை இஞ்சிச்சாற்றில் இரண்டு மணி நேரம் வரை அரைக்க வேண்டும. பின் அதைப் பட்டாணி அளவுக்கு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொண்டு வாந்தி, பேதி, காலரா குணமாக 2 மணி நேரத்திற்கு ஒரு முறை 1 மாத்திரை வீதம் சாப்பிடலாம்.
பாலின் மருத்துவ குணங்கள் : மூக்கடைப்பு, மண்டைச் சளி, ஒற்றைத் தலைவலி, தும்மல் ஆகியவை நீங்கிட எருக்கம் பாலை, மூக்குப் பொடியாகப் பயன்படுத்தலாம். மாடடுச் சாணியில் செய்யப்பட்ட வரட்டி (எருமட்டை)யை எரித்து அதன் சாம்பலை எருக்கம் பாலில் ஊறவைத்து உலர வைக்க வேண்டும். அதை அரைத்து மூக்குப் பொடியாக முகர்ந்தால் தும்மல் ஏற்பட்டு மண்டைச் சளி நீங்கும்.
வண்டுக்கடி, படை, சொரி, சிரங்கு மற்றும் நாள்பட்ட தோல் வியாதிகள் இருக்குமிடத்தில் எருக்கம் பாலைப் பூச வேண்டும். அங்கு எரிச்சலாக இருக்கும். ஆனால் சிலருக்கு ஒரே முறை பூசினாலே குணமாகி விடும். குணம் தெரியவில்லை என்றால் சில நாட்கள் மீண்டும் பூச வேண்டும்.
உலர்ந்த எருக்கம் பாலை நரம்புத் தளர்ச்சிக்கு டானிக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
எருக்கம் பால் சுட்டெரிக்கும் மருத்துவ குணத்தை உடையதாகும். தலை வழுக்கை, குஷ்டம், சொரி, சிரங்கு மற்றும் மூலத்தின் மருக்களின் மீது பாலைத் தடவினால் அவை குணமாகும்.
எருக்கம் செடியின் பாலை, தொழு நோயாளிகளின் அழுகிய புண்கள் நீங்கிட பூசுவார்கள்.
எருக்கம் பால் தலைப் பொடுகு, படை, மூட்டு வலிகள், மூட்டு வீக்கம், மூல நோய்க்கு மருந்தாகப் பயனளிக்கிறது.
முடி தேவை இல்லாத இடத்தில் எருக்கம் பாலைப் பூசுவார்கள். தேனுடன் எருக்கம் பாலைக் கலந்து பல் வலியைப் போக்க பூசுவார்கள். அரிசி அளவு உலர்ந்த எருக்கம் பூக்கள் குஷ்ட நோயைக் குணப்படுத்த பயன்படுத்துவார்கள்.
எருக்கம் பாலை பாம்பு விஷத்தை முறிக்கப் பயன்படுத்துவார்கள்.
வேரின் மருத்துவ குணங்கள் : எருக்கம் வேரை எடுத்து அதன் கரியை நல்லெண்ணெயில் கொதிக்க வைத்து, தொழுநோய் தோலின் மீது பூசுவார்கள்.
ஆண்களுடன் உடல் உறவு கொள்வதால் உண்டாகும் நோய்கள் குணம் பெறவும் இந்தச் செடியைப் பயன்படுத்துகின்றார்கள்.
இதே போல் விபச்சாரிகளையும், தேவதாசிகளையும், அன்னியப் பெண்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்கும் ஆண்களுக்கு வெட்டை நோயில் இருந்து பாதுகாப்பு பெற வெள்ளை எருக்கன் செடியைப் பயன்படுத்துவர்.

1 comments:
எருக்கஞ்செடி பழம் USE?
Post a Comment