//18 வயசுல ஒரு பையனும் பொண்ணும் அவங்க விரும்பனா சுதந்திரமா திருமணம் செய்துகொள்ளலாம் என்று அரசாங்கமே சுதந்திரமும் அங்கீகாரமும் கொடுக்கும் போது நீங்க (பெற்றவர்கள்) எதற்கு தடையாக அவர்களை தடுக்கிறீர்கள் கண்டிக்கிறீர்கள்? இதுதான் சென்ற வார நீயா நானாவில் மனுஷ்ய புத்திரன் வாதம்/ /
------------------------------------------------------------------------------
வாதம் என்று வரும் போது அடுத்தவரும் பேச வாய்பளிக்க வேண்டும் என்ற உணர்வும், அடுத்தவர் தனது கருத்தை, வாதத்தை வெளிப்படுத்தும் போது ...
அதனை உள்வாங்கிக் கொண்டு பின்பு தான் பேசவேண்டும் என்ற அடிப்படை உணர்வு (அறிவுகூட) இல்லாத மனுஷ்ய புத்திரனையெல்லாம் TRP ரேட்டிங்கிற்க்காக கூட்டி வைச்சு பேசும் விஜய் டிவிக்கு எனது ஆழ்ந்த நன்றி!
தன்னோட பிள்ளை எப்போது சரியான முடிவும் தெளிவான முடிவும் எடுக்கும் என்பதை பெற்றவனை விட அரசாங்கத்திற்கு தெரிந்துவிடுமா ? 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் தெளிவானவர்கள் என்று அரசாங்கமோ அல்லது சொம்படி சித்தரோ நிரூபிக்கமுடியுமா ?
18 வயது நிரம்பிய தன் பிள்ளை சாராயம் குடித்தால் கண்டிக்கிற பெற்றவன், புகைபிடித்தால் கண்டிக்கிற பெற்றவன் தன் பிள்ளை காதலித்தாலும் கண்டிக்க தான் செய்வான் அவனை கண்டிக்க கூடாது என்ற சொல்லுகிற சட்டமாகட்டும் இல்லை மனுஷ்ய புத்திரனாகட்டும் எவருக்கு உரிமை இல்லை.
பெற்றோர்கள் தனக்கு பிள்ளை என்று ஒன்று பிறந்துவிட்டால் அதன் பிறகு வரும் வாழ்நாட்கள் முழுவதும் அந்த பிள்ளைக்காக ஒதுக்கிவிடுகிறான். அப்படி இருக்கும் பெற்றவனின் பயம் பிள்ளையின் வாழ்கையை பற்றியதே! அதே பயம் தான் அந்த கண்டிப்பிற்க்கும் காரணம்.
நீங்கள் சொல்வது போல் 18 வயது நிரம்பிய பிள்ளைகளுக்கு தன் வாழ்கை துணையை சுயமாக தேர்ந்தெடுக்கும் உரிமையும் தெளிவும் சிந்தனையும் இருக்குமேயானால் 18 வருடமாக உன்னை படைத்து உருவாக்கிய உன் பெற்றோரின் உரிமையையும், உன்னை கண்டிக்கிற உணர்வையும் எளிதாக புரிந்து கொள்ளமுடியுமே!
18 வயதில் வருவது காதல் மட்டுமே தான்.
ஆனால் வாழ்கை பற்றிய தெளிவும் சிந்தனையும் 15லும் வரலாம் 25லும் வரலாம் அல்லது வராமலும் போகலாம். அது அவர்களை பெற்ற பெற்றோருக்கு மட்டும் தான் தெரியும்.
விஜய் டிவியின் இந்த வியாபார நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது ?
ஏற்கனவே "பெண்கள் தாலி அணிவது அவசியமா" என்ற தலைப்பில் இந்துக்களின் கலாசாரத்தை அசிங்கபடுத்தியது நினைவிருக்கும்.இனி வருங்காலங்களில் கணவர்களுக்கு அதிக சுகம் தருபவர்கள் மனைவியா ? வைப்பாட்டியா ? என்று கூட விவாதம் வரலாம்.

0 comments:
Post a Comment