தயவுசெய்து வேண்டாமே !!!
ஒருத்தனால மொத்த பேரும் மேல போயிருப்போம்...
அதிகாலை தூக்கம் படு மோசமானது, அதனிடம் விளையாடுவது ஆபத்துடன் விளையாடுவது போன்று. அப்டியே ஆளை சாய்ச்சுபுடும்...
கடந்த ஞாயிறு நள்ளிரவு 1.30 மணி அளவில் சென்னைக்கு செல்வதற்காக திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். நீண்ட நேரமாக எந்த பேருந்தும் வரவில்லை. நேரம் கடந்து கொண்டே போனது ஆனால் பேருந்து வந்தபாடில்லை. நேரக்காப்பாளரிடம் கேட்டபோது 3 மணிக்கு மேல்
தான் சென்னைக்கு பேருந்து என்று சொல்லி விட்டார் .
காலையில் முன்கூட்டியே அலுவலக செல்லவேண்டி இருந்தது . அப்போது தான் சென்னையை சேர்ந்த பாரதி கால் டாக்ஸி (Bharathi Call Taxi) ஒன்று வந்து நின்றது. அதிலிருந்த ஓட்டுனர் "சென்னை" "சென்னை"ன்னு கத்திக்கொண்டு இருந்தான் .சரி அண்ணாமலையாரா பார்த்து அனுப்பி வைத்தார் போல என்று நினைத்துகொண்டு அவரிடம் சென்னைக்கு செல்ல எவ்வளவு என்று கேட்டேன், 150 என்றார்.
சரி பேருந்து காசை விட 40 ரூபாய் தானே அதிகம் என்று முன் சீட்டில் ஏறிக்கொண்டேன். 2.55 மணிக்குள் மேலும் 3 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம்.
திண்டிவனம் முன்பு வரை இரண்டு இடங்களில் நிறுத்தி தூக்கம தேநீர் அருந்திவிட்டு வண்டியை ஓட்டினார் .
நாங்கள் தூங்கி கொண்டு வந்தோம். திடீரென்று வண்டி சாலையில் குறுக்கும் நெருக்குமாக அலைய விழிதுகொண்டு ஓட்டுனரை பார்த்தால் அந்த சனியன் புடிச்சவன் பாதி தூக்கத்துல வண்டியை ஓட்டிகிட்டு இருக்கான்.உடனே வண்டியை நிறுத்த சொல்லி முகம் கழவ சொல்லி மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம். மீண்டும் அவ்வபோது கண் சொக்கி சொக்கி தான் வண்டி ஓட்டினான் .
பயபுள்ள கண்ணு நல்லா தொறந்து தான் இருக்கு ஆனா லாரியா தேடி தேடி போய் இடிக்க போறான். ஒரு வழியா பெருங்களத்தூர் வரும்வரை உயிரை கையில் பிடித்துகொண்டு வந்தேன் .
அந்த நாதாரி இரவு 9 மணிக்கு மேல சென்னையிலிருந்து கிளம்பி திருவண்ணாமலைக்கு ஒரு குடும்பத்தை கொண்டு விட்டுட்டு திரும்பி(return) சென்னை போகும் போதும் தான் எங்ககிட்ட கேட்டு எங்களையும் அழைச்சுட்டு கெளம்பி இருக்கான். சும்மா போறதுக்கு வந்தவரைக்கும் லாபம்ன்னு 150 ரூபாய் பேசி அழைச்சுட்டு கெளம்பிருக்கான்.
பகல் முழுக்க வண்டிய ஓட்டிட்டு இரவு முழுக்க வண்டிய ஓட்டி எங்க கொல்ல பார்த்தான் அந்த கம்னாட்டி நாயி. நீண்ட தூர சவாரிக்கு போறதுக்கும் வரதுக்கும் சேர்த்து தான் காசு வாங்குறானுக அது பத்தாதுன்னு இப்படி வேற. படுபாவி நைட்டு தூங்கிட்டு காலைல கெளம்பி இருந்தா அவன் உசுருக்கும் ஆபத்தில்லை ,நமக்கும் ஆபத்தில்லை.
ம்ம்ம்... தப்ப நம்ம மேலையும் வைச்சுகிட்டு அவனை மட்டும் குறை சொன்னா எப்புடி ..
அப்போ முடிவு பண்ணினேன் ,இனி ஜென்மத்திற்கும் இரவு நேரத்துல கால் டாக்ஸில ஏறுவது இல்லன்னு ...
தயவு செய்து யாரும் நைட்ல இந்த மாதிரி ரிட்டன்(Return) சவாரி மட்டும் ஏறிடாதீங்க. அவனுக மேல(சொர்க்கத்துக்கு) போறது மட்டுமல்லாமல் நம்மளையும் துணைக்கு இட்டுகினு போய்டுவாணுக ஜாக்கிரதை.
"அனுபவமே ஒரு மனிதனுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தரும்"

0 comments:
Post a Comment