headline photo

பசுக்களும் எருமைகளும் என்ன பாவம் செய்தன ?

Tuesday, September 17, 2013

இதனை நான் சொல்வதனால் ஒரு சிலருக்கு முக சுளிப்பை ஏற்படுத்தலாம் ,ஆனாலும் அவற்றின் உணர்வையும் புரிந்துகொள்வோமே !!! 

முன்பெல்லாம் கிரமாத்தில் பெண்கள் கூட மாடுகளை காளைக்கு இட்டு செல்வார்கள் எந்தவித முகசுழிப்பும் இல்லாமல் .அந்த வகையில் நான் கூறும் இந்த செய்தி யாருக்கும் முகசுளிப்பை ஏற்படுத்தாது என்று நம்புகிறேன் .

முன்பெல்லாம் பசு மாடோ அல்லது எருமை மாடோ அதனை சினைபிடிக்க வைக்க காளைக்கு வைப்பார்கள் ,அதாவது இயற்கையான முறையில் உறவை மேற்கொள்ள வைப்பார்கள்.அதன் மூலமாக தான் அந்த மாடுகள் குட்டி ஈன்று தாயும் சேயும் நல்ல ஆரோக்கயதுடன் இருக்கும் .

ஆனால் தற்போது எந்த வித தாம்பத்யமும் இல்லாமல் சினை ஊசியின் மூலமாக நேரடியாக கற்பபையில் வைத்து கருத்தரிக்க வைக்கிறார்கள் .அதனால் பயனடையும் நமக்கு வேண்டுமானால் அது சிறந்ததாக இருக்கலாம்,ஆனால் அந்த மாடுகள் பிறந்து, தன் பருவநிலை காலத்தில் வாழ்ந்து எந்த வித தாம்பத்ய சுகத்தையும் அனுபவிக்காமல் தன் வாழ்நாட்களை முடித்துகொள்ளும் அவற்றின் கொடூரத்தை நாம் புரிந்துகொள்வது இல்லை. (பசு ,எருமை போன்று இன்னும் ஒரு சில மிருகங்களும் இந்த வேதனைக்கு ஆட்படுத்தபடுகின்றன).

இச்சை என்பது மனிதனுக்கு மட்டும் தானா? மாடுகளுக்கெல்லாம் வரகூடதா? எத்தனையோ மிருகங்கள் தனது இஸ்டத்திற்கு தனக்கு தோன்றும் நேரத்தில் தனது இச்சையை தீர்த்துகொள்ளும் போது பாவம் இந்த பசுக்களும் எருமைகளும் என்ன பாவம் செய்தன ?
அவைகளுக்கு தீர்வு தான் என்ன ?

0 comments:

Post a Comment