headline photo

அரடஜன் ஆட்டுக் குட்டியையும் லவுக்க போடாத பொம்பளைய காட்டுனா நீயெல்லாம் பாரதிராஜா ஆயிடுவியா ?அன்னக்கொடி -அலசல்

Tuesday, September 17, 2013

"அன்னக்கொடி" டைரக்டருக்கு பெரிய பாரதிராஜான்னு நினைப்பு போல...
கொய்யால அரடஜன் ஆட்டுக் குட்டியையும் லவுக்க போடாத பொம்பளைய காட்டுனா நீயெல்லாம் பாரதிராஜா ஆயிடுவியா ? மொதல்ல ஹீரோயின் ஹேர்ஸ்டைல மாத்துங்கயா, ஐப்ரோ கொஞ்சம் தூக்கலா இருக்கு. அதுகூட பரவா இல்ல படத்துல ஒரு வில்லன் நடிகர அறிமுகபடுத்தி இருக்காங்க, படமுழுக்க அவரு தான் சுத்தி சுத்தி வராரு,எதாவது பெரிய இடத்து புள்ளையா
இருக்குமோ என்னமோ அதான் அவரையே திரையில நிரச்சுருக்காங்க. இந்த லட்சணத்துல அவர் எந்திரன் ரஜினி மாதிரி பஞ்ச் டயலாக் வேற , சகிக்கலை . ( அவர் ம்மேமேமே என க்ளோசப் ல கத்தும்போது அப்பா சாமி முடியல .
கிராமத்துல சாராயம் காய்ச்சறது, கடனுக்கு பொண்டாட்டிய ஒட்டிவிடறது , ஊருக்கு ஒதுக்கபுரமா ஒய்யாரி கொழிகொழம்பு சாப்பிட கூவறது இதெல்லாம் மட்டும் நல்ல வக்கனையா படம் போட்டு காட்டுங்க.
"அன்னக்கொடி" நல்ல அருமையான மொக்க படம்.

ம்ம்ம் இதுங்கலாம் கிராமத்து படம் எடுக்க அலையுதுங்க ...

வௌக்கெண்ணை வடியும் முகத்துடன் கதாநாயகி, நாயகன் ஏய் என்ன புள்ள..? என்று பேசும் மதுரை பாசையின் இயல்பான நடை, புழுதி பறக்கும் கரிசல் மண்ணு இதெல்லாம் திரையில உயிரோட்டமா உலாவும், ஆட்டாம்புளுக்கைய காட்டுனா கூட அதோட வாசனை திரையை தாண்டி உன் சீட்டுக்கே வரும் ,நடிக்கிற அம்புட்டு கதாபாத்திரத்துக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் பாரதிராஜா எங்கே ? நீ எங்கே? போய் அவருகிட்ட அசிஸ்டண்டா வேலைபாத்துட்டு அப்பறம் எடுங்கய்யா அன்னகொடி அரளிசெடி எல்லாம்...

0 comments:

Post a Comment