headline photo

மதுவின் பரிசு விரைவில் நம் பிள்ளைகளை தேடி!!!

Tuesday, September 17, 2013

உயிர் குடிக்கும் பாலியல்! 
மதுவின் பரிசு விரைவில் நம் பிள்ளைகளை தேடி!!!

3 வயது மகளுக்கு மது கொடுத்து, கண்ணை கட்டி கற்பழித்த குடிகாரத் தந்தை.
செங்துங்கநல்லூரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்
மீண்டும் ஒரு பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம்.
டெல்லியில் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம்.
3 ,1/2வயது பள்ளி குழந்தைகள் மீது பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி உரிமையாளரின் கணவர் .
14 வயது மாணவியை வகுப்பறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்.
மூன்று வயது குழந்தையை பலாத்காரம் செய்த தந்தை தலை

மறைவு!
இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்புணர்ந்த தந்தை.
மகளை கற்பழித்த கொடூர தந்தை.
etc..........

டெல்லியில் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், தூத்துக்குடி மாவட்டம், செங்துங்கநல்லூரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவை மது போதையால்தான் நடந்துள்ளன அதுமட்டுமல்லாமல் தனது மூன்று வயது குழந்தை என்று கூட பாராமல் தந்தையே கற்பழித்த சம்பவங்கள் போன்ற பல சம்பவங்கள் பெரும்பாலும் போதையின் உச்சத்திலே அரங்கேறியுள்ளது. இதுவரை நடந்த கொலை கொள்ளை ,கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் 80 சதவீத பங்கு மதுவை உட்கொண்ட போதை நாய்களினால் தான். போதையில் மலத்தை கூட சர்க்கரை பொங்கல் என்று நினைத்து திங்கும் இந்த வக்கிர புத்தி கொண்ட பன்றிகள் தண்டனை கொடுத்தாலோ இல்லை அழிதாலோ மீண்டும் மீண்டும் புதிதாய் முளைத்து கொண்டுதான் இருப்பார்கள் .

அப்படிப்பட்ட இந்த மதுவை அரசாங்கதின் வருவாய் பெருக்கி என்ற என்பதற்காக அதனை அழிக்காமல் விடுவது எந்த விதத்தில் நியாயம் ?
இதற்கும் சில மேதாவிகள் பதிலும் சொல்வார்கள் அரசு ஏற்று விற்கவில்லை என்றால் தரமற்ற கள்ள(விஷ) சாராயங்கள் பெருகி விடும் அதுமட்டுமல்லாமல் தாரமற்ற சாராயத்தால் செத்துவிடுவார்கள் என்று ,,,நாய்கள் குடித்து மடியட்டுமே.

மதுவிலக்கை அமல்படுத்த சொல்லி திரு ராமதாஸ் அவர்கள் நீண்ட நாட்களாக போராடி வருகிறாரே யாருக்காவது தெரியுமா ? எங்கே தெரிய போகிறது!!! அவரை ஒரு சாதிய தலைவராகவும் ,அரசியல் தலைவராக மட்டுமே தானே தெரியும் ...
ஒன்று நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒட்டு மொத்த மக்கள் சக்தியை முன்னிறுத்தி மதுவிலகிர்காக போராட வேண்டும், இல்லை போராடுபவர்கள் பக்கமாவது நாம் இணைந்து போராட வேண்டும். அதனை விடுத்தது போராடும் அவர்களை நக்கலடிப்பதால் நமக்கு என்ன லாபம் ?

சுயநலத்திற்க்காக நாம் எத்தனையோ செய்கிறோம் அதில் இதையும் செய்யுங்களேன் ? ஒரு சில பேர் கேட்கலாம் அரசியல் ஒட்டுக்காக தான் இந்த ஆள் இப்படி போராடுகிறார் என்று , இருந்ந்திட்டு போகட்டுமே போராடும்போது கூட இருங்கள் இலக்கை அடைந்த பிறகு உங்களுக்கு பிடித்தவர்களுக்கு நீங்கள் நல்ல அரசியல்வாதி என்று நினைக்கும் தலைவர்களுக்கு ஒட்டு போட்டு கொள்ளுங்கள் , போட்டால் ஏன் போட்டீர்கள் மருத்துவர் வந்து சட்டையை பிடித்தா கேட்கபோறார் ?மதுவிலக்கிற்கு மருத்துவர் என்றில்லை வேறெந்த அமைப்பு , கட்சி வேண்டுமானாலும் போராடட்டும் நாம் துணை நிற்கலாம் அல்லவா ?

நமக்கு தேவை நம் பெண் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஈவு இரக்கமற்ற வக்கிர புத்திகொண்ட அந்த ஓநாய்களிடம் சிக்கி சின்னாபின்னமாகாமல் நிம்மதியாக வாழ்ந்தால் போதும் .

இல்லையா... நாட்டின் தலைநகரே ஸ்தம்பிக்கும் அளவுக்கு அங்க மாணவர்கள் மற்றும் பல அமைப்புகள் கட்சி சாதி மத பேதமின்றி போராடி இலக்கை நெருங்கியது போல தமிழகத்தில் அனைத்து தமிழர்களும் ஒன்று சேர்ந்து அனைத்து மதுபானகடைகளையும் தரைமட்டமாகுவோம்.

நமக்கு தேவைன்னா போராடுறா தமிழனுக்கு, நமக்கு தேவை இல்லாத இந்த மதுவிற்காககவும் போராட வேண்டாமா ?

ஆனா ஒன்று நிச்சயம் நாம் அனைவரும் சாதி மத கட்சி பேதமின்றி ஒன்று திரண்டாலே போதும் மதுபான கடைகளை அடித்து நொறுக்க கூட தேவை இல்லை, நாம் அனைவரும் ஒன்று திரண்ட செய்தி மட்டுமே போதும் தாமாகவே அரசு மதுக்கடைகளை அப்புறபடித்திவிடும்...

மதுவை தவிர சட்டங்கள் மிக கடுமையாக கொண்டு வரப்பட்டு உடனுக்குடன் நிறைவேற்றவும் படவேண்டும். 

கற்பழிப்பவனுக்கு சரியான தண்டனை ஆணுறுப்பை அறுத்து விட வேண்டும்(மருத்தவ துணையோடு ) . வாழ்நாள் முழுவதும் அவன் பெண்சுகம் இல்லாமல் வாழ்ந்து சாக வேண்டும் .

நம்ம வீட்டு பச்சிளம் குழந்தை பெண் பிள்ளைகளுக்கு இப்படி நடந்திருந்தால் அய்யயோ நினைச்சு பார்த்தாலே தற்கொலை பண்ணிகினும் போல இருக்குயா .

0 comments:

Post a Comment